நீயே மகனாக பிறக்கணும் மாமா! உருகிய புகழ்!

0
217

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ். சில தினம் முன்பு அவரின் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த அவருடைய காதலியான பென்சி என்பவரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

 

மிகவும் சிரமப்பட்டு வாழ்வில் முன்னேறிய புகழை ஆரம்ப காலத்தில் இருந்து காதல் செய்தவர் பென்சி , இப்போது தான் காதல் கணவரை கரம்பிடித்து போட்டோக்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது.

 

வருடம் முன்பு உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடியன் வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜி மற்றும் புகழ் இருவரும் பல்வேறு கெட்டப்களில் மக்களை மகிழ்வித்து வந்தனர்.புகழின் வெற்றிக்கு பின்னணியாக வடிவேல் பாலாஜி செய்த காரியங்களை ஒவ்வொரு மேடையிலும் புகழ் எடுத்துரைக்க தவறியதே இல்லை.

அந்த அளவிற்கு வடிவேல் பாலாஜி புகழுக்கு ஒரு முதுகெலும்பாக இருந்துள்ளார் என்பது அவர் வெளிப்படுத்தும் அண்பிலேயே தெரியும்.

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் புகழ். புகழ் மற்றும் சிவாங்கியின் சேட்டைகளை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

 

புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தது இல்லை

 

வடிவேல் பாலாஜியின் பிறந்த நாளுக்கு கூட, அவர் ஹாப்பி பர்த்டே மாமா ! நீ எப்பவும் என் கூட இருப்ப ! மக்களை நீ என்னைக்கும் ஹாப்பியா வைக்கணும் அப்படின்னு நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றுவேன் மாமா மிஸ் யூ.

என்று பதிவிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற கமெண்ட்டுகளை அள்ளி தூவினர் என்றே சொல்லலாம்,

 

இப்பொழுது தனது மனைவி பென்சியுடன் வடிவேல் பாலாஜியின் படத்தின் முன்பே நின்று இருவரும் அவரை வாங்குவது போன்று ஒரு போஸ்டை வெளியிட்டுள்ளார், அதில் , ” இனிய திருமணநாள் வாழ்த்துக்கள், உங்கள் திருமணநாள் அன்று எனது வாழ்கை பயணத்துல அடுத்த கட்டதுல அடியெடுத்து வைக்கிரேன், உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்களுக்கு இருக்கும்னு நம்புறன், எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா பொறக்கணும் மாமா, அந்த கடவுளா வேண்டிக்கிரேன், என அவர் பதிவிட்டுள்ளார்.

 

https://www.instagram.com/p/CiG9ajGrsFP/?igshid=YmMyMTA2M2Y=

Previous articleஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
Next articleBig Boss season 6 தெறிக்கவிடும் கமல்! வெளியான புரோமோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here