திடீரென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பதறிப்போன பயணிகள்! இறுதியில் ஓட்டுநர் செய்த காரியம்!

0
200

ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து தலமலை வழியாக சத்தியமங்கலத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

நெய்தாளபுரம் வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, அங்கிருந்த தரை பாலத்தில் காற்றாற்று வெள்ளம் ஓடியது.

பேருந்து கடந்து செல்லும் அளவிற்கு தண்ணீர் சென்றதால் ஓட்டுநர் காட்டாற்றை கடக்க முயற்சி செய்தார்.

தரை பாலத்தின் நடுப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று காப்பாற்றில் மிகப்பெரிய வெள்ளம் உண்டானது. உடனடியாக ஓட்டுநர் பேருந்து வேகமாக செலுத்த முயற்சி செய்தார் ஆனால் அதற்குள் பேருந்தில் இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் பேருந்து நின்று விட்டது. அதோடு டயர்கள் முழுவதும் மூழ்கி அதிக வேகத்தில் காட்டாற்று வெள்ளம் சென்றதால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

ஓட்டுனர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பேருந்தை இயக்க முடியவில்லை. இதற்கு நடவே பேருந்திலிருந்து பயணிகள் கீழே இறங்கினால் தண்ணீர் இழுத்துச் சென்று விடும் என்று யாரும் கீழே இறங்கவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் இதே நிலை நீடித்தது. பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர் அதன் பிறகு வெள்ளம் ஓரளவு குறைந்தது, டயர்கள் வெளியே தெரிய தொடங்கினர்.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுநர் பேருந்து இயக்கி மெல்ல, மெல்ல, காற்றைக் கடந்தார். அதன் பிறகு தான் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Previous articleதிமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!
Next articleஇந்த இரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here