ஒரு அரசன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வானத்தில் கழகு ஒன்று தனக்கு இரையாக கிடைத்த பாம்பு ஒன்றை தன்னுடைய கால்களில் பற்றிக் கொண்டு பறந்து சென்றது.
அந்த கழுகின் இறுக்கமான பிடியிலிருந்த பாம்பு தன்னுடைய வாயிலிருந்து சில துணி விஷத்தை கக்கியது. அந்த விஷமானது அரசன் வைத்திருந்த உணவு பாத்திரத்திற்குள் விழுந்தது விஷம் இழந்த உணவை அறியாமல் ஒரு அந்தணருக்கு வழங்கினான் அரசன்.
அந்த உணவை வாங்கி உட்கொண்ட அந்தணர் மறுகணமே உயிரிழந்து போனார். இதை கண்ட அரசன் மிகவும் வருத்தப்பட்டார்.
கர்ம வினைகளை கணக்கெடுத்து பலன்களை எழுதும் சித்திரகுப்தனுக்கு, இந்தக் கர்ம நிகழ்வின் வினையை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டானது.
இந்த கர்ம வினையை கழுகுக்கு வழங்குவதா? அல்லது பாம்பிற்கு வழங்குவதா? அல்லது அரசனுக்கு வழங்குவதா? என்று அவர் பரிதவித்துப் போனார்.
கழுகு அதற்கான இறை தூக்கிச் சென்றது. அது அந்த கழுகின் தவறல்ல. இறந்து போன பாம்பின் வாயிலிருந்து விஷம் வழிந்தது.
சாவின் பிடியில் இருந்த போது எதைச்சையாக நடைபெற்ற அந்த நிகழ்வு பாம்பின் தவறும் கிடையாது. அரசனுக்கு பாம்பின் விஷம் உணவில் கலந்திருப்பது தெரியாது.
அவன் அறியாமல் நடந்த நிகழ்வுக்கு அவன் மீதும் குற்றம் சுமத்துவது சரியாக வராது. ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயலாமல் சித்திரகுப்தன் குழம்பிப் போனார்.
இது தொடர்பாக எமதர்மனிடமும் சென்று வினவினார் சித்திரகுப்தன் சற்று நேரம் யோசித்த எமதர்மர், சித்ரகுப்தா இதற்கான பதில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் பொறுமையாக இரு, என அறிவுரை வழங்கினார்.
சில தினங்கள் கழித்து அரசனின் உதவியை பெறுவதற்காக சில அந்தணர்கள் அவருடைய அரண்மனைக்கு வருகை தந்தனர். வழி தெரியாததால் சாலையோரம் அமைப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் அவர்கள் வழி கேட்டார்கள்.
அப்போது அந்த பெண்மணி அவர்களுக்கு சரியான பாதையை கூறியதுடன் இந்த அரசன் அந்தணர்களை கொலை செய்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்தாள்.
அந்த வார்த்தையை கேட்டவுடன் சித்ரகுப்தன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் அந்தணரை கொலை செய்த கர்மாவின் வினை முழுவதும் இந்த பெண்மணியையே சாரும் என அவர் முடிவு செய்து அதையே பாவ புண்ணிய புத்தகத்தில் எழுதவும் செய்தார்.
ஆம் அடுத்தவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மையிருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும். அதே நேரம் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதுமே வந்தடையும். ஆகையால் அடுத்தவர்களை பற்றி பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.