உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்!

0
95

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்!

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவி கொள்ளலாம் அதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மறைந்துவிடும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு தேங்காய்ப்பாலுடன், அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக இருக்கலாம்.

அன்னாசிப்பழச் சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்தச் சாறை பஞ்சில் லேசாகத் தொட்டு உதடுகளில் தடவினால், வெடிப்பு, எரிச்சல் மறைவதுடன் இதழ்களும் அன்னாசிக்கு இருக்கிறது. பயத்தமாவு, தயிர், தேங்காய்ப்பால் மற்றும் அன்னாசிப்பழச் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஷhம்புபோல தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், வெடிப்பு நீங்கி கூந்தல் பளபளக்கும். தலையில் அதிக எண்ணெயப் பசை இருந்தால் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

 

author avatar
Parthipan K