அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்!
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்றவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அரியலூர் ,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்யவில்லை.அதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதனால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை விரைவில் மின்னஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.