ஒரே மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் விபரீத முடிவு! நீட் தேர்வு மட்டுமே காரணம்!
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர்.அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் மாணவர்கள், மாவட்ட வாரியாக உள்ள மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணிக்கு நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. இதனைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
அதனையடுத்து அதே மாவட்டத்தில் திருத்தணியை சேர்ந்த ஜெயசுதா(17) என்ற மாணவி நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அங்கங்கே தற்கொலை சம்பவம் அரேங்கேறி வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சைத்தை ஏற்படுத்தியுள்ளது.