பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் 

0
140
Snake in Ear
Snake in Ear

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம்

உலகில் நாள்தோறும் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பல்வேறு வினோத சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கமாகி விட்டது.

சமீபத்தில் மகனை பாம்பிடமிருந்து காக்கும் தாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது போலவே வீட்டிற்குள் பாம்பு நுழைவது, பாம்பிடமிருந்து மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளதை பார்த்திருப்போம்.

காதுக்குள் SNAKE

இந்நிலையில், இப்போது இன்னொரு பாம்பு சம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் எப்போது எங்கே நடைபெற்றது என்று அதுபற்றி எந்த தகவலும் தெரியவில்லை. ஆனாலும் வீடியோவை பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும் வகையில் பயங்கரமாக உள்ளது.

இந்த வீடியோவில் ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு உள்ளது. இதுவரை சிறு குழந்தைகள் கல்லையோ அல்லது நாணயம் போன்ற வேறு ஏதாவது சிறிய பொருளையோ விழுங்கி விடுவார்கள் அல்லது அதை காதில் தெரியாமல் போட்டுக்கொள்வார்கள்.இது பற்றிய வீடியோக்களை தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இந்த வீடியோவில் உள்ளது போல ஒரு பெண்ணின் காதுக்குள் எப்படி பாம்பு வந்தது  என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. அந்த அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை நம்பவும் முடியவில்லை. அதே நேரத்தில் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இதற்கான காரணம், அந்த பெண் பாம்பு காதுக்குள் நுழைந்ததுமே, மருத்துவரிடம் சென்றுள்ளார்.அந்த மருத்துவரும், ஒரு சிறிய கொரடு மூலமாக அந்த பாம்பை மெல்ல மெல்ல  வெளியே எடுக்கிறார். அவர் இவ்வாறு பாம்பை பெண்ணின் காதிலிருந்து வெளியே எடுப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

அதே நேரத்தில் காதுக்குள் பாம்பு போகும் வரை அந்த பெண்ணுக்கு அது எப்படி தெரியாமல் போனது? என்ற கேள்வியை இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள். நம்பிக்கை இல்லையென்றாலும் பார்ப்பவர்கள் மத்தியில் மரண பீதியை இந்த வீடியோ ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டும்உறுதியாகிறது.

Previous articleஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!
Next articleபள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!