சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்

0
152

சிறை கைதியாக நயன்தாரா! லீக்கானது புகைப்படம்

 

நம்ம தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் இந்தியில் தயாராகி வருகிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார்.அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 

இதுமட்டுமல்லாமல் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் புகைப்படங்கள் முன்பே la வெளியாகியுள்ளன. அதில் நடிகை நயன்தாரா சிறைக் கைதி தோற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன் அடிப்படையில் இந்தப்படத்தில் நயன்தாரா சிறை கைதியாக நடித்து வருகிறார் என்று கிசு கிசுக்கிறார்கள். நடிகர் ஷாருக்கான் தற்போது சென்னையில் தங்கி இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.