வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு
வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்று மதத்தினர் சிலர் தங்களது பொருட்களை இந்து கடவுள்களின் பெயரில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபார ரீதியாக அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை மாற்று மதத்தினர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். குறிப்பாக இந்த போக்கு சமீப காலமாக தொடர்ந்து அதிகரிக்க துவங்கி உள்ளது.
வியாபாரத்தில் முன்னேற ஒவ்வொருவரும் அடிக்கடி புதிய யுக்திகளை அறிமுகப்படுத்துவர். அதில் குறிப்பாக அந்த பொருட்களின் நுகர்வோர் யாரென்று பார்த்து அவர்களை குறிவைத்து யுக்தி அமைக்கப்படும். அந்த வகையில் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்து நுகர்வோர்களை குறிவைத்து தங்களது வியாபாரத்தில் சில சமரசம் செய்து கொள்ள மாற்று மதத்தினர் தயாராகி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் மாற்று மதத்தினர் பலரும் தங்களுடைய நிறுவன பெயர் மற்றும் விற்பனை செய்யும் பொருட்களின் பிராண்ட் பெயர் உள்ளிட்டவைகளை இந்து கடவுள்கள் பெயரில் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனை, மாற்று சமூகத்தினர் பலரும் தங்களது தொழிலில் புதிய உத்தியாக பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு பெயர் வைக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும், குறிப்பாக பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்து கடவுளின் பெயர்களை மட்டும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி குறுக்கு வழியில் வருமானம் ஈட்ட முயற்சிக்கின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் ஹிந்து உரிமையாளர்கள் தயாரிக்கும் பொருட்களை மாற்று மதத்தினர் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் அதே மாற்று மதத்தினர், தங்கள் பொருட்களுக்கு மட்டும் ஹிந்து கடவுள் பெயர்களை வைத்து இந்துக்களிடம் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த குற்றசாட்டு உண்மையா? உண்மையெனில் ஹிந்து கடவுள் பெயரில் பொருட்களை தயாரிப்போர் உண்மையில் ஹிந்துக்களா என நாமும் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன.
இன்று தொழில்நுட்ப வசதிகள் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்களின் பெயரை நுகர்வோர் சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட முடியும்.
இதுமட்டுமல்லாமல் சில ஹிந்து நிறுவனங்களை, மாற்று மதத்தினர் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற நிறுவனங்கள் வாங்கியுள்ளன.இதையும் நுகர்வோர் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
அதாவது நுகர்வோர் அந்த நிறுவனங்களில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் போது, ரசீதில் உரிமையாளரின் பெயர் இருக்கும். அதன் மூலமாக அந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.