தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே! சேலத்தியே திரும்பு பார்க்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
இந்த காலகட்டத்தில் இறந்தவர்களை மீட்டுக் கொண்டுவரும் வகையில் அவர்களின் மெழுகு சிலையை உருவாக்குகின்றனர். இறந்தவர்களைப் போலவே அச்சு பிசராமல் அவர்களின் மெழுகு சிலை உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் மெழுகுச்சிலை முன்பு திருமணம் செய்து கொள்வது, சமீபத்தில் டிரெண்டாகி வருகிறது. இவ்வாறு செய்வதால் இறந்தவர்கள் சுப நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பது போல் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இயேசு ராஜா என்பவர் தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக செய்துள்ளார். இவர் தந்தை இறப்பதற்கு முன்பாகவே இவரது அக்கா திருமணத்தை நடத்தி வைத்து விட்டார். ஆனால் இவர் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே இவர் தந்தை கொரோனா தொற்றால் இறந்து விட்டார்.
அவர் முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என எண்ணி அவர் தந்தையின் மெழுகு சிலையை அவரது மகன் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகவே பெங்களூருவில் இந்த மெழுகு சிலை தயாரிக்கும் நிறுவனத்தில் தந்தையின் புகைப்படத்தை கொடுத்து சிலை தயாரிக்க கூறியுள்ளார். இவர் திருமணத்தன்று அவர் தந்தையின் மெழுகு சிலை சேலம் வந்தடைந்தது. தந்தையின் மெழுகு சிலை முன்பு அவரது மகன் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தின் மூலம் மகன் மற்றும் அப்பாவின் பாசத்தை கண்டு மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.