தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கியூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

நடப்பு கல்வியாண்டில் முதல் கியூட் என்ற பொது தேர்வானது நடத்தப்பட்டது. அந்த தேர்வு மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலை ,முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக  நடத்தப்படுகிறது. 44  மத்திய பல்கலைகழகங்கள் 12 மாநில பல்கலைகழகங்கள் உட்பட மொத்தம்  90 பல்கலைகழகங்களில் இந்த தேர்வு மூலம்தான் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மேலும் இளங்கலை படிப்புக்கான நுழைவு தேர்வுகள் கடந்த ஜூலை  மாதம் 15 ஆம் தேதி முதல்  கடந்த ஆகஸ்ட் மாதம் 30 வரை நடத்தப்பட்டது. இந்நிலையில்  பல்கலைகழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் இளங்கலை பல்கலை கழக நுழைவு தேர்வு முடிவுகள் இந்தமாதம் 15 ஆம் தேதிக்குள் அல்லது அதற்க்கு முன்னதாகவே தேசிய தேர்வு முகமை வெளியீடும் என கூறினார்.

Leave a Comment