பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

0
136
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இன்று முதல் தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த மின்கட்டண உயர்வை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!

மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல!

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

Previous articleமருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!
Next articleகல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!