திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இத்தனை வசதிகளுடன் மின்சார பேருந்தா?
திருப்தி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலலை பாதுகாக்கும் நோக்கத்தில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதற்கு ஆந்திர முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து இன்று திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பேருந்துக்களை இயக்கம் நிர்வாக பொறுப்பு மெகா என்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பேருந்தில் மொத்தம் 36 இருக்கைகள் ,குளிர்சாதன வசதி ,கண்காணிப்பு கேமரா ,தானியங்கி கதவுகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை இயக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் பத்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.வருகிற 27 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கவுள்ளது.அப்போது முதல்வர் முன்னிலையில் இந்த பேருந்து இயக்கம் தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.