ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் மம்தா பானர்ஜீயின் கருத்து என்ன?

0
125

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

ஐந்து கட்டங்களாக பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்றே அறிவிக்கப்பட்டன.
இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தனது டுவிட்டர் வலைத்தளபக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் ‘வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ப.ஜ.க.வால் ஏற்ற பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கிடைத்து இருப்பது. மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.

Previous article“5 பேருக்கு தூக்கு” – பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு.
Next articleஇந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்