வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்? 

0
1000

வீட்டில் செல்வம் பெருக பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும்?

வீட்டில் செல்வம் ஒற்றுமைக்காக நாம் பூஜைகள் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். அதேபோல வீட்டிலிருக்கும் சில பொருள்கள் இந்த திசையில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சாத்திரம். பணத்தை சம்பாதிப்பது திறமை என்றால் அதனை காப்பதும் ஒருவித திறமை தான். பலருக்கும் சம்பாதித்து வீட்டிற்கு கொண்டு வரும் பணம் சிறிதளவு கூட தங்குவதில்லை என்று வருத்தம் உள்ளது.

அவர்களுக்கெல்லாம் இது ஓர் பெரிய தீர்வாக இருக்கும். குறிப்பாக பீரோ ஈசானி மூலையில் வைக்க கூடாது. ஈசானி என்பது தண்ணீர் இருக்கும். இடம் அதனால் காசு தண்ணீர் போல செலவாகி விடும். அக்னி மூலையிலும் பீரோ அமைக்க கூடாது. அக்னிமூலை என்பது நெருப்பு இருக்கும் இடம். அதனால் அந்த மூலையிலும் பீரோ வைக்க கூடாது. அக்னி மூலையில் பீரோ இருந்தால் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். தடைகளை நீக்கி வழி பலன்களை செய்யும் கடவுள் தான் விநாயகர்.

அவர் பெரும்பாலும் திருக்கோவில்களில் தென்மேற்கு பகுதியில் கன்னி மூலையில் இருப்பார். அதேபோல வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனி மூலையில் பீரோ வைத்தால் தேவையற்ற செலவுகள் குறையும். தென்மேற்கு பகுதியில் வைக்கும் விழாவை கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கி வைக்கலாம். மேலும் பணம் வைக்கும் இடத்தில் விநாயகரை நினைத்து சிறிதளவு மஞ்சள் துண்டை வைக்கலாம்.

அதன் மேல் பணம் நகை போன்றவற்றை வைக்கலாம். இவ்வாறு வைப்பதால் மங்களம் காரியங்களுக்கு மட்டும் உங்களது பணம் செலவாகுமே தவிர இதர காரியங்களுக்கு பணம் செலவாகாது. அது மட்டும் இன்றி அனாவசியம் செலவுகள் குறைந்து பணம் நகைகள் சேரும்.

இவ்வாறு சேமிப்புக்கு வைக்கப்படும் பணத்தில் இருந்து தினந்தோறும் செலவிற்கு பணம் எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக வாயு மூலை எனப்படும் வடமேற்கில் சிறிதளவு பெட்டியில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.