இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவரை சந்திக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததை அடுத்து அமெரிக்க எம்பிக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் அதிபர் டிரம்ப் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த குழுவில் இந்திய வம்சாவளிப் பெண் எம்பி பிரமிளா ஜெயபால் இடம் பெற்றிருந்ததை அறிந்ததும் அந்த குழுவை சந்திக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது
இந்தியாவில் காஷ்மீரில் 370 ஆவது பிரிவை இந்திய அரசு நீக்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தவர்தான் இந்த பிரமிளா எம்பி. அதனால்தான் அவர் இருக்கும் குழுவை சந்திக்கமத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கூறிய அமெரிக்க பெண் எம்பிக்கள் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோர், ‘அமெரிக்க எம்பிக்களின் குரலை ஒடுக்க இந்திய அமைச்சரும் இந்தியாவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் பிரமிளா ஜெயபாலனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பல எம்பிக்கள் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது