ஓபிஎஸ் தரப்புக்கு விழுந்த சம்மட்டி அடி! எடப்பாடி ஆதரவாளர் சி.வி. சண்முகம் அதிரடி
அதிமுக நடத்திய பொதுகுழு செல்லும்,அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அனைவருக்கும் சம்மட்டி அடியாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும்,முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக அலுவலக சாவி வழக்கு 3 வார இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது இரு அண்டை வீட்டுக்காரர்களின் இடையேயான பிரச்னையல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக் கொள்வதா என்றும் நீதிபதி சந்திரசூட் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்தார்.
அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என கூற இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அலுவலகத்தை முடக்கினால் எப்படி இயங்க முடியும். மேலும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் சி.வி. சண்முகம் கூறியுள்ளதாவது,
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று கூறி ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று ஓ.பன்னீர் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடி சீல் வைக்கும் நிலைமைக்கு தள்ளினார்.
ஆளும் திமுக தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 50 ஆண்டுகாலம் வலிமையாக உள்ள அதிமுகவின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தது. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தவறு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்டிஓ எடுத்த நடவடிக்கை செல்லாது என்றும் அவர் அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜூலை 20 ஆம் தேதி தீர்ப்பளித்தார். அந்த உத்தரவை ஏற்று அதிமுக அலுவலகத்தை எங்கள் பொறுப்பில் ஏற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
உயர்நீதிமன்றநீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அனைவருக்கும் சம்மட்டி அடியாக உள்ளது.
ஒரு அரசியல் கட்சியை நீங்கள் முடக்கினால் எப்படி இயங்க முடியும், இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான செயல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறியதோடு அதிகார வரம்புக்கு மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் முன்பு சாலையில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை. இது ஒரு அலுவலகம் தொடர்பான இரு தரப்புக்குப்புமான பிரச்சினை இல்லை. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எப்படி அரசியல் கட்சியின் அலுவலகத்தை ஆர்டிஓ சீல் வைக்கலாம் அது தவறு என்று உயர்நீதிமன்ற சொன்ன கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவை நிராகரித்துள்ளனர் என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.