படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு
கோலிவுட் திரையுலகின் தற்போதைய மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. அந்த திரைப்படம் வெற்றி அடைகிறதோ இல்லையோ, அந்த திரைப்படம் 200 கோடி மற்றும் 300 கோடி வசூல் செய்ததாக தனது ரசிகர்கள் மூலம் பொய்யான செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பி அடுத்த படத்திற்கு அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் பழக்கத்தை மாஸ் நடிகர்கள் உள்ளனர். இதனால் பல தயாரிப்பாளர்கள் கோலிவுட் திரையுலகில் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கூடிய தயாரிப்பாளர் சங்கத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஒரு உச்ச நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த நடிகர்களே தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கழித்த பின்னரே டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு நிபந்தனைகளை அனைத்து தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வி என்பது நடிகர்கள் மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என அனைவரின் உழைப்பும் உள்ள நிலையில் தோல்வி அடைந்தால் நடிகரிடம் மட்டும் நஷ்ட ஈடு கேட்பது சரியா? என்றும் சிலர் கூறி வருகின்றனர். மொத்தத்தில் மாஸ் நடிகர்கள் இந்த கட்டுப்பாட்டுக்கு ஒப்புக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.