மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! 

0
206

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி!

மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியி அமைந்த பிறகு பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக பாஜக பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனின் அடுத்த கட்டமாக பாஜகவினர் பேரணியாக இணைந்து கொல்கத்தாவின் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவிக்க சென்றனர்.

இந்தப் பேரணியில் அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தாரும் பலர் கலந்து கொண்டனர். இவர்களை செல்ல விடாமல் ஆங்காங்கே போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். இவ்வாறு போலீசார் தடுத்து நிறுத்தியதால் பாஜகவிற்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர்.

இந்தப் பேரணியால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் வெகு நேரம் பாதிக்கப்பட்டது.மேலும் தலைமை செயலகம் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கு ஒரு படி மேலாக பாஜகவினர் போலீசாரின் காருக்கும் தீ வைத்தனர்.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீர் அடித்தும், கண்ணீர் புகை கூண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.இந்த கலவரம் குறித்து, இதுதான் அமைதி வழி போராட்டமா என திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது.

Previous articleமாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!
Next articleஅதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்