கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பாஸ்கர் மீன்பிடி தொழிலாளியானா இவருக்கு மாற்றுத்திறனாளி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கரின் நண்பர், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஜீன். இருவரும் ஒன்றாக அடிக்கடி மது அருந்துவார்கள். அதன்படி, கடந்த 31-ம் தேதி இவருவரும் பாஸ்கரின் வீட்டில் அருகே மது அருந்தியுள்ளனர்.
அப்போது, பாஸ்கரின் மகள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கொடூரன் ஆரோக்கிய ஜீன், வேண்டுமென்றே, பாஸ்கருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளார். உச்சக் கட்ட போதையில், பாஸ்கர் தன் நிலை மறந்து விழுந்து விட்டார் , இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜூன் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளான்.
வீட்டில் தனியாக இருந்த பாஸ்கரின் மகளை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக சிறுமியை மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
காலையில் விஷயம் அறிந்த பாஸ்கர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரோக்கிய ஜீன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை தேடி வந்தனர்.
போலீசார் தம்மை தேடுவதை அறிந்த ஆரோக்கிய ஜீன் தலைமறைவானான். மாறுவேடத்தில், ஊருக்குளேயே சுற்றித் திரிந்த அவன், போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த ஆரோக்கிய ஜீன், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நண்பருக்கு மது வாங்கிக் கொடுத்து அவரது மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.