30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸூக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் அந்த திரையரங்குகளில் முதல் படமாக பொன்னியின் செல்வன் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தோடு விக்ரம் வேதா திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.
3 திரைகளைக் கொண்ட மல்டிப்ளக்ஸ் திரையில் இந்தியாவின் முன்னணி திரையரங்க முதலீட்டு நிறுவனமான ஐனாக்ஸ் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதல்களால் காஷ்மிரில் திரையரங்குகள் மூடப்பட்டன. அதன் பின்னர் இப்போதுதான் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.