நிசான் கார் வாங்குபவர்களுக்கு பம்பர் பரிசு?

0
125

ஜனவரி முதல் நிசான் கார்களின் விலை உயருகிறது. ஜப்பானிய நிறுவனமான நிசான் இந்திய மார்க்கெட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வு கூடுதல் உற்பத்தி செலவு இன்னும் உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் தனது கார்களின் விலை 5 சதவீதம் இருப்பதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படிதான் கார்களின் விலை மாடல்கள் தகுந்தவாறு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நிசான் இந்திய தலைவர் ரமேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புமிக்க தயாரிப்புகளை வழங்கி வருகிறோம் என்றும் தற்போதைய சவாலான சந்தை சூழல் மற்றும் செலவினத்தை மனதில் வைத்து அனைத்து கார்களின் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றார். இதனிடையே தற்போது நிசான் ரெட் வீகென்ட்ஸ் என்ற பெயரில் கார்களுக்கான சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கி வருகிறது.

இதன்படி suv காருக்கு 40 ஆயிரம் வரை தள்ளுபடியும் 40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது தவிர ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய சிறப்பு பரிசுகளும் வாடிக்கையாளர்களுக்கு நிசான் நிறுவனம் வழங்க உள்ளனர்.

Previous articleகருப்பு பணம் குறித்த தகவல்கள் – வெளியிட அரசு மறுப்பு !!!
Next articleஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்