சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

0
220

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்துக்குப் பிறகு சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்‌ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸாகி வைரல் ஆனது. இதையடுத்து தற்போது செகண்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெஸ்ஸிகா என்ற பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Previous articleமாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!
Next article“பூம்ரா வந்தாலும் எதுவும் மாறாது… இந்திய அணி ரொம்ப வீக்காக உள்ளது” ஆகாஷ் சோப்ரா கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here