ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! அக்டோபர் ஒன்று முதல் அமல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்ல வில்லை அதனால் பண பரிவர்த்தனைகள அனைத்தும் இணையவழியாக மாறிவிட்டது.மேலும் இது நவீன தொழில்நுட்ப காலம் என்பதால் அனைத்தும் மொபல்போன் வழியாகவே வீட்டில் இருந்த படியே பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.இணையவழியில் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அவ்வாறு பொருட்களை வாங்கும்பொழுது எதிர்கால பயன்பாட்டுக்காக வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் விவரங்களை வலைதளத்தில் சேமித்து வைத்திருக்கும் வசதியை சம்பந்தப்பட்ட இணைய வர்த்தக நிறுவனங்கள் வழங்கி வருகின்றது.வங்கி அட்டைகள் சார்ந்த விவரங்களை இதுவரை வங்கிகள் மட்டுமே சேமித்து வைத்து வந்த நிலையில் மூன்றாம் நபர்களாகிய இணையவழி வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு சார்ந்த விவரங்களை தங்கள் வலைதளத்தில் சேமிப்பது பாதுக்காப்பானது அல்ல
இவை இணையவழி மோசடிகளுக்கு எளிதில் வழிவகுக்கும்.தற்போது புதிய நடைமுறை ஒன்றை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.இந்த புதிய நடைமுறையின் படி வாடிக்கையாளர்கள் இணையவழி வர்த்தக நிறுவனங்களில் பொருள்களை வாங்கும் போது பணம் செலுத்துவதற்கு வங்கியின் விவரங்களை நேரடியாக பதிவு செய்ய வேண்டாம்.ஒவ்வொரு வங்கி அட்டைக்கும் குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும் அந்த எண் மட்டும் வழங்கி பணம் செலுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வங்கி அட்டையின் பாதுகாப்பை பெறுவதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம்.இந்த வங்கி அட்டைக்கான அடையாள எண் நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல் படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.