அவருடைய பேச்சை கேளுங்க! ரஷ்யாவுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன்!

0
243

சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அவருடைய பேச்சை கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இந்த நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ். சி. ஓ. என சொல்லப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

அந்த சமயத்தில் தற்போது நடைபெற்று வரும் யுகம் போருக்கானது அல்ல என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஐ.நா. பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பல நாட்டு தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை வரவேற்றுள்ளார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளேவர்ஸி சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு மரியாதை இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மீது ரஷ்ய அதிபர் புட்டினுக்கும், மரியாதை மற்றும் நட்பு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆகையினால், மோடியின் பேச்சை கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர்.

முன்னதாக ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று முன்தினம் இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!
Next articleBreaking: 3 வயது குழந்தையின் மீது வேன் ஏறி விபத்து! வீட்டின் முன்பே அரங்கேறிய சோகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here