குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!
திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். இதனைக் கண்ட திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி அதனை எதிர்த்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்து சமயத்தின் நிலைப்பாடு அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக தான் உள்ளது.
இந்துக்களை தவிர்த்து இதர மதத்தினரை பாஜக முற்றிலும் தவிர்ப்பதாகவும் சில அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றது.இவ்வாறு கூறும் கருத்தை பாஜக முற்றிலும் எதிர்க்கிறது.நாங்கள் இந்து மதத்தை மற்றும் போதிக்கவில்லை அவ்வாறான நோக்கமும் எங்களிடம் இல்லை என பாஜக சப்பை கட்டு கட்டி வந்தாலும் இவ்வாறான சில பதிவுகள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்து விடுகிறது. அந்த வகையில் சிபிஎஸ்சி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு வர்ண கோட்பாடு கூறப்பட்டுள்ளது. முதலாவது வரிசையில் அங்கவஸ்திரத்துடன் உள்ள பொம்மையை பிராமணர்கள் என்றும், இரண்டாவது வரிசையில் போர் வீரர்கள் பாணியில் சத்திரியர்கள் என்றும் ,அதேபோல மூன்றாவது வரிசையில் வைசியர்கள் என்றும் நான்காவது வரிசையில் கோமணம் கட்டப்பட்டு சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல அவர்கள் எந்ததெந்த பணிகளை செய்யக்கூடியவர்கள் அவர்களின் அதிகாரம் என்ன என்பதையும் கூறியுள்ளனர்.அந்தவகையில் சூத்திரர்கள் என்ற வரிசை, இவர்கள் மேலே உள்ளவர்களுக்கு வேலை செய்ய நியமிக்கப்படுபவர்கள், லேபர்ஸ் எனக் கூறியுள்ளனர். இதனை சிறு குழந்தைகளின் மனதில் தற்பொழுதிலிருந்தே விதைக்கப்பட வேண்டுமா?? என்று திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி கேட்டுள்ளார். இவ்வாறு யார் உயர்ந்தவர்கள் என்பதை குழந்தைகள் கற்றுக்கொண்டால் சக மாணவர்களுடனே பிரிவினையை ஏற்படுத்திவிடும்.
மேலும் இந்த பாடத்தை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது தற்பொழுது வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. நாங்கள் அனைத்து மதத்தையும் ஒன்றாக தான் பார்க்கிறோம் என்று பாஜக மாநில அணி தலைவர் அண்ணாமலை கூறுவதை எதிர்த்து, இதை என்னன்னு கேளுங்க மலை, அண்ணாமலை என்றும் விமர்சித்துள்ளார்.