ரயில்களில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் உரத்த குரலில் பேசவோ அல்லது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை இயக்கவோ கூடாது என்பது தான்.
அதனையடுத்து ரயில்வே அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, அவை புறப்பாடு ,வழிதடம் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெரும் வகையில் ரயிலின் என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சாதனம் பொருத்தப்பட்ட என்ஜின்கள் மற்றும் ரயில்களின் இருப்பிடம் ,வேகம் போன்றவற்றை எந்த ஒரு தலையீடுமின்றி கண்காணிக்க முடியும் என்றும் தற்போது 2 ஆயிரத்து 700 என்ஜின்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.