யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

Photo of author

By Pavithra

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்களை முடக்கி தடை செய்துள்ளது மத்திய அரசு.

புலனாய்வு அமைப்பின் தகவலின் அடிப்படையில்,
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்தியாவின் பொது ஒழுங்கு,வெளிநாட்டு உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவலை பரப்பியதாக பத்து youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்கள் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட வீடியோக்களில், சமூக வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் வெளியிட்ட போலி வீடியோக்களும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகூர் கூறியுள்ளார்.முடக்கப்பட்ட இந்த வீடியோக்கள் சுமார் 1 கோடி 30 லட்சம் பேர் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.