சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?

0
143

தங்களிடம் உள்ள சொத்துக்களை அடக வைக்கவோ அல்லது விற்கவோ முயற்சித்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அசல் ஆவணங்கள் தொடங்காவிட்டால் சொத்து தொடர்பான எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது.

ஏனென்றால் வங்கிகள் முதல் தனியார் வங்கி சாரான் நிதி நிறுவனங்கள் வரையில் எல்லாவற்றிற்குமே கடன் அடமானம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொத்து தொடர்பான ஆவணங்கள் தேவை.

ஆகவே சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத விதத்தில் திருடு அல்லது தொலைந்து போகும் சூழ்நிலை உண்டானால் சொத்து தொடர்பான ஆவணங்களின் நகலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தற்போது பார்க்கலாம்.

சொத்து குறித்த முக்கிய ஆவணம் அல்லது பத்திரங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த எஃப் ஐ ஆர் நகல் உரிமையாளரால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த உதவும்.

ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாளில் சொத்தின் விவரங்கள், இழந்த ஆவணங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களை யாராவது கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் தொடர்பான அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும்.

ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்கு சான்றிதழ் தொலைந்து போனால் அதனை மறுபடியும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது எஃப் ஐ ஆர் நகல் மற்றும் செய்தித்தாள விளம்பரம் அளித்தவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆகவே குறிப்பிட்ட சான்றிதழ் தொலைந்து போனால் மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு விஷயங்களையும் உடனடியாக செய்ய வேண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சொத்து விவரங்கள் தொலைந்த ஆவணங்கள் எஃப் ஐ ஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல் உள்ளிட்டவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பணம் செய்து முத்திரைத்தாளில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலமாக சான்றளிக்கப்பட வேண்டும்.

சொத்து பத்திரத்தின் நகல்களை பெறுவதற்கு சொத்து பதிவாளர் இடம் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.

எஃப் ஐ ஆர் நகல். செய்தித்தாள் விளம்பர அறிவிப்பின் நகல். வழங்கப்பட்ட பங்கு சான்றிதழ்களின் நகல். நோட்டரி செய்யப்பட்ட அண்டர்டேக்கிங் சான்றிதழ்.

சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இது போன்ற சில புகார்களுக்கு இணையதள மூலமாக பதிவு செய்து எஃப் ஐ ஆர் பெரும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆகவே காவல் நிலையம் செல்வதற்கு முன்னால் உங்கள் பகுதியில் இது போன்ற வசதி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Previous articleஅரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!
Next articleBreaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!