பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

Photo of author

By Parthipan K

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் தினம்தோறும் பள்ளி மாணவ ,மாணவிகள்  பொது மக்கள் என அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்,அந்த வகையில் இன்று காலை வழக்கமாக உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்ல அரசு பேருந்தில் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த பேருந்தானது சனுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உப்பாறு ஆற்று பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது மாணவர்களின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

மேலும் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கி கொண்டிருப்பவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.