இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!
அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக ,புதுச்சேரி,திருவண்ணாமலை மற்றும் கடலூர் செல்லக்கூடிய பேருந்துகளும் ,பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ,ஓசூர் மற்றும் திருப்பதி செல்லக்கூடிய பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர் ,திருச்சி மதுரையிலிருந்த்து செல்லும் பேருந்துகள் மற்றும் கோவை திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன .
இந்த பேருந்துகளில் மக்கள் செல்ல சிரமம் ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.