தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்
ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ஸ்பைசஸ் போர்டு |
பணியின் பெயர் | பயிற்சி ஆய்வாளர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
SPICES காலிப்பணியிடங்கள்:
TRAINEE ANALYST IN MICROBIOLOGY என்ற இந்த பதவிக்கு தற்போது ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
பயிற்சி ஆய்வாளர் கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ANALYST வயது வரம்பு:
நேர்காணல் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 25 வயது நிரம்பியவர்களாக இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
பயிற்சி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ஸ்பைசஸ் போர்டு தேர்வு செயல்முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான நேர்காணல் 18.10.2022 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வில் கலந்து கொள்ளும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த பணிக்கான கீழுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.