சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த  ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

0
285

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த  ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிப் பன்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் முதல் இருமொழித் திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது.

இதற்கிடையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் இப்போது அவரிடம் இருந்து சென்னை உள்ளிட்ட சில ஏரியாக்களின் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்துக்குப் பிறகு சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்‌ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Previous articleபட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleஇந்த கஞ்சியை தினமும் தவறாமல் குடிங்கள்! தாய்ப்பாலுக்கு பஞ்சமே இருக்காது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here