கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!

0
130

தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகளை நியமித்து வருகிறது தமிழக அரசு.

அந்த வகையில் தொடக்கப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் வட்டார வள அதிகாரியான பி இ ஒ பதவியில் 81 இடங்களை நிரப்புவதற்கு சென்ற வாரம் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

அணி மூப்பு அடிப்படையில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் சென்னையில் நடைபெற்ற கவுன்சிலிங்கிற்க்கு அழைக்கப்பட்டனர். கவுன்சிலிங் கில் பங்கேற்ற  50 பேர் மட்டும் தங்களுக்கு பி இ ஓ பதவியில் பணியாற்ற சம்மதம் என்று தெரிவித்தார்கள்.

அதோடு அதற்கான உத்தரவையும் பெற்றுக் கொண்டனர். மற்றவர்கள் இந்த அதிகார பதவி வேண்டாம், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலேயே தொடர்கிறோம் என்று தெரிவித்து பதவி உயர்வை புறக்கணித்தனர் ஆகவே 31பி.இ.ஒ இடங்கள் காலியாக உள்ளனர்.

இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் சிலர் தெரிவித்ததாவது, முண்டெல்லாம் கல்வித்துறை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் சமீபகாலமாக கல்வித்துறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு என்ற குளறுபடி காணப்படுகிறது. மாணவர்களின் கற்பித்தல் பணிகளை கவனிப்பதை விட அரசியல் ரீதியான பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அமைச்சர் தரப்பு அரசியல் ரீதியான உத்தரவை பிறப்பித்தால் ஐஏஎஸ் தரப்பு அதற்கு முரண்பாடாக உத்தரவை பிறப்பிக்கின்றனர். கற்பித்தல் பணிகளை விடவும் புள்ளி விவரங்களை சேகரிக்க கூடுதல் பணி சுமை வழங்குகிறார்கள்.

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற முறையில் புள்ளி விவரம் சேகரிக்கவே திணறும் நிலையில் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பி.இ.ஒ என்ற அதிகார பதவியில் கூடுதல் நெருக்கடி இருக்கிறது. ஆகவே பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் இந்த பதவியை விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

Previous articleஅரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!
Next articleபோட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்!