போட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்!

0
110

போட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பாம்பு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லரின் அபாரமான சதத்தால் 221 ரன்கள் சேர்த்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது பர்சபரா ஸ்டேடியத்தில் பாம்பு ஒன்று நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய இன்னிங்ஸின் ஏழாவது ஓவர் முடிந்ததும் திடீரென ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போதுதான் வர்ணனையாளர்கள் ‘தரையில் பாம்பு இருப்பதாகக் கூறப்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது’ என்று ஏர்லைனில் கூறினார்கள்.

பெரிய திரையில் பாம்பு தோன்றுவதற்கு முன்பு, இந்திய பேட்டர்கள் மற்றும் தென்னாப்பிரிக்க ஃபீல்டர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிப் பார்ப்பதை கேமராக்கள் முதலில் காட்டியது. உடனடியாக, மைதான ஊழியர்கள் மைதானத்திற்கு விரைந்து வந்து அழைக்கப்படாத பார்வையாளரை மைதானத்திற்கு வெளியே எடுத்துச்  சென்றனர். பின்னர் போட்டி தொடங்கியது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸின் போது மைதானத்தில் இருந்த ஒரு மின்கம்பத்தில் லைட்கள் எரிவது நின்றதால சில நிமிடங்கள் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது.