கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இன்று பிற்பகல் அவருக்கான தண்டனையை சிறப்பு நீதிபதி ராதிகா அறிவித்தார்.
அதன்படி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சிறுமியின் தாயார் மனு ஒன்றை அளித்தார் அதில் தனது மகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.