இந்த இனிய தினத்தில் உங்கள் குழந்தைகளை இன்றே அழைத்துச் செல்லுங்கள்!!
சரஸ்வதி தாயாருக்கு உகந்த நாளான இன்றைய தினத்தில் பலரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர்.இந்நன்னாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது தமிழ் பெற்றோர்களின் அனைவரின் நம்பிக்கையாகும்.
அதேபோன்று தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகளின் சேர்க்கை பதிவு நடைபெறும்.
விஜயதசமி நாளான இன்று உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உடனே அழைத்துச் செல்லுங்கள்.
தமிழகத்தில் இந்த விஜயதசமி நாளை ஒட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கான சேர்க்கையை நடத்த தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.எனவே இன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பாரா? போன்ற எந்தவித சந்தேகமுமின்றி உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அழைத்துச் செல்லலாம்.