அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
205

பருவ மழை நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே நேரம் பருவமழை தவறாமல் பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இருந்தாலும் ஒரு சில விவசாயிகள் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அத்துடன் நீண்ட காலமாக கர்நாடக மாநிலத்துடன் இருந்து வந்த பிரச்சனை காவேரி மேலாண்மை வாரியம் மூலமாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் காவிரி ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஒங்கோல் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு தொகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை போன்ற வட மாநிலங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்த விதத்தில் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற 18 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Previous articleபொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை!
Next articleபெற்றோர்களே உஷார்! இந்த சிரப்பை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு!