2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள்
Loksabhaelections2019 முதல் #chandrayaan2 மற்றும் #cwc19 வரை, இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் பல உரையாடல்களையும் , பங்கேற்புகளையும் பெற்று இருந்தது
ஒரு சராசரி இந்தியனின் சமூக பொறுப்பை இப்போதெல்லாம் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஹேஸ்டேக்குகளை பற்றி பார்க்கலாம்.
1.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய #loksabhaelections2019 ஹேஸ்டேக் ட்விட்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
2.இதைத் தொடர்ந்து # சந்திரயான் 2, உலகின் முதல் ரோபோ ரோவரை சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கும் இஸ்ரோவின் தரைவழிப் பணி நெருக்கமாகப் பின்பற்றப்பட்டது, இந்தியர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் இதை அதிக படியாக ட்வீட் செய்ததால், சந்திரயன் 2, ஹேஸ்டேக் ட்விட்டர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3.ட்விட்டர் ஹேஸ்டேக் பட்டியலில் முன்றாவது இடத்தில் இருப்பது #cwc19. கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்த போதிலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் அதிகமாக ட்விட் செய்தது #cwc19 பற்றி தான்.
4.இதைத் தொடர்ந்து #Pulwama. புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்த செய்தி இந்தியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
5.இதேபோல், #அரசியலமைப்பு 370 மற்றும் #ayodhyaverdict போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஹேஷ்டேக்கும் அதிக அளவில் ட்விட்டரில் பேசு பொருளாக இருந்தது.
6.எல்லா வருடம் போல 2019 வருடமும் திரைப்படங்கள் பற்றிய ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் மற்றும் ஹாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் மற்றும் நடிகர் விஜய் நடித்த திரைப்படமான பிகில் தான்.
இவை இரண்டும் கடந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது, அப்படங்களை பற்றிய ஒவ்வோரு அப்டேட்டயும் ரசிகர்கள் #பிகில், #அவென்ஜர்ஸ்எண்ட்கேம் என பதிவிட, அதுவே அடுத்து அடுத்து ட்விட்டர் ஹேஸ்டேக் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.