திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
159

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் அலாதிய மக்கள் கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அவ்வபோது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வழக்கம். நேற்று ஒரு நாளில் மட்டும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

அந்த வகையில் நாளை மூன்றாவது வார சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படும். தற்பொழுதே திருப்பதியில் மக்கள் ஆறு கிலோமீட்டர் வரை காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் நாளை மூன்றாவது சனிக்கிழமையையொட்டி இலவச தரிசனம் செய்பவர்கள் 35 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதே போல 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் காத்திருக்கும் நிலை உண்டாகும் என கூறியுள்ளனர்.இலவச தரிசனத்திற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் பல அறைகள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இலவச தரிசனம் பக்தர்களை ஆறு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நிற்க வைத்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கான உணவு, குடிநீர்,டீ போன்றவற்றையும் வழங்குவதற்கு தேவஸ்தானம் முன்னேற்பாடுகள் செய்து வைத்துள்ளது. இவ்வாறு பக்தர்கள் கூட்டம் அலைமோதி இருக்கும் வேலையில் விஐபி தரிசனத்தை அனுமதிக்க முடியாது.

இதனால் விஐபி தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மூன்றாவது சனிக்கிழமை ஒட்டி விஐபி தரிசனம் செய்ய தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Previous articleஇயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்!
Next articleநிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!