“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்!

0
168

“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்!

செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் சிலர் பணம் இழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என்ற நோக்கில் தற்போது ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டத்திற்கு தமிழக அரசு கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் விளையாட்டை ஒழுங்கப்படுத்தும் சட்டம், குறிப்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அவசர சட்டம் என்பதால் நாளை இந்த அவசர சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முறையாக எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்டு தடை உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை இது போல் தமிழக சட்டப்பேரவை இயற்றிய சட்டம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்த முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க, அதற்கான நெறிமுறைகளை நன்கு ஆராய்ந்து அவசர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleநிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை அபேஸ் செய்த மேலாளர்! பரபரப்பு சம்பவம்!
Next articleபண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!