சென்னை ராயப்பேட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உட்பட அனைவரும் விரும்பினார்கள்.
ஆனால் கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே 100% இணைப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என கூறியிருக்கிறார் புகழேந்தி.
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார் சுயலாபத்திற்காக பன்னீர் செல்வத்துடன் இணைய மாட்டோம் என்று அவர் கூறி வருகிறார். மேலும் அவருடைய இந்த முடிவு தொடர்பாக பன்னீர்செல்வம் வருத்தப்பட்டார் என்று தெரிவித்துள்ள அவர், அதிமுகவை குழி தோண்டி புதைப்பதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரப் போக்குடன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
தேவர் ஜெயந்தி அன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய பன்னீர்செல்வத்திற்கு தான் தகுதியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், தேவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சாதி என்ற போர்வையின் கீழ் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். அதிமுக என்பது ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சாதி இல்லாத கட்சியாக அதிமுகவை வழி நடத்தி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பொதுச் செயலாளராக முடியாது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.