மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன??

0
148
Mental Health Awareness!! What are the measures taken by the government??
Mental Health Awareness!! What are the measures taken by the government??

மனநலம் குறித்த விழிப்புணர்வு!! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன??

இன்று உலகம் முழுவதும் மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இக்காலகட்டத்தில் மக்கள் பலர் பலவித பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு செல்லப்படுகின்றனர். அதிலிருந்து வெளியே வந்து அதனை ஏற்று வாழ்க்கையை நடத்துவது குறித்து இந்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் இருப்பதால்,  மனதளவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல கிராமப்புறங்களில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் தொலைதூர மனநல மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஆதரவற்ற நிலையில் உள்ள மனநல நோயாளிகளை அரசாங்கம் ஒரு காப்பகம் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதற்கென்று ஓர் மீட்பு குழுவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக அரசு மனநல சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் பார்க்கும் பொழுது நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன் மாணவர்கள் தோல்வியை கண்டு மனம் தளராமல் இருக்க அவர்களுக்கு இலவச கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

Previous articleஇன்று உலக மனநல நாள்! மக்கள் என்ன செய்ய வேண்டும்?
Next articleஇன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?