சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

Parthipan K

the-tragedy-of-the-prisoner-in-the-prison-excitement-in-salem

சிறையில் கைதிக்கு நேர்ந்த சோகம்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம்.இவருடைய  மகன் வெங்கடேசன்(40). இவர் கடந்த மார்ச் மாதம் 13 தேதி ஆம் தகராறு ஒன்றில் உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இதுவரை யாரும் ஜாமீன் எடுக்க முன் வரவில்லை அதனால்  தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆறு  மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனை அறிந்த சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனையடுத்து சிறையில் இருந்த விசாரணை கைதி இறந்ததால் விரைவில் சிறைக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார் என கூறப்படுகின்றது.