பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

0
198
Purpose of Girl Child Day! Find out too!
Purpose of Girl Child Day! Find out too!

பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

அக்டோபர் 11 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வேதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகின்றது.மேலும் இந்த நாளில் குழந்தைத் திருமணம் ,பெண்களுக்கு எதிரான வன்முறை ,கல்வி உரிமை மற்றும் பல பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆண் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சி பெண் குழந்தைகள் பிறந்தால் வெறுத்து ஒதுக்குகின்றனர்.

அதனால் தான் பெண் சிசுக் கொலைகள் ஏற்படுகின்றது.அதனை தடுத்து பாலின சமத்துவமின்மையை குறைக்கவும் பெண்களுக்கான சமத்துவம் ,உரிமையை நிலை நாட்டவும் இந்த தினம் முக்கத்துவம் பெற்றுள்ளது.இந்த தினமானது பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் மற்றும் பெண் குழந்தைகள் தினம் என்றும் சர்வதேச பெண் தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மேலும் மார்ச் 8  அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம் ,இளம் வயதுப் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு முக்கியத்துவம்  அவர்களின் திறனை வெளி உலகிற்கு கொண்டுவருவதற்கும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.மேலும் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும்.இந்த நாளில் பெண் குழந்தைகளை வாழ்த்தி ,கவுரவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

Previous articleஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் 
Next articleநிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??