கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

0
125

கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் போன்ற பல்வேறு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகளை திமுகவிற்கு இருக்க அந்த கட்சி தீவிர முயற்சிகளையும் செய்து வருகிறது. ஆனால் அந்த முயற்சி தற்போது வரையில் எந்த விதமான பலனையும் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுக மற்றும் தேமுதிகவிலிருந்து முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் ஆறு குட்டி மற்றும் தினகரன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே திமுகவில் இணைந்துள்ளனர்.

முன்னாள் மேயர் வேலுச்சாமியும் திமுகவில் இணைவார் என்று தகவல் கிடைத்தது. ஆனால் அவர் இணையவில்லை. அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களில் ஒரு சிலரை திமுக ஆதரவாளர்களாக மாற்றுவதற்கு முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிலும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆளுங்கட்சியாக இருந்தும் கூட அதிமுகவிலிருந்து அடிமட்ட நிர்வாகிகளை கூட திமுகவினரால் தங்கள் பக்கம் இழுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்படியான சூழ்நிலைகள் தான் மாற்று கட்சியினரை கட்சிக்கு இழுக்கும் ஒரு யுக்தியாக தேமுதிகவிலிருந்து வந்த தளபதி முருகேசனையும், மதிமுகவிலிருந்து வந்த தொண்டாமுத்தூர் ரவியையும் மாவட்ட செயலாளராக திமுக தலைமை தேர்வு செய்தது.

தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் மேயர் ராஜ்குமாருக்கு, தற்போது மாவட்ட அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்பான காலத்தில் மக்கள் நீதி மையத்திலிருந்து வந்த மகேந்திரனுக்கு ஐடி பிரிவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பல நபர்களை கூண்டோடு இருப்பதற்கும் முயற்சி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளராக இருந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் சேலஞ்சர் துரை நேற்று அந்த கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் திமுக அல்லது பாஜகவில் இணைவார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி விட்டேன். இப்போதைக்கு எந்த விதமான முடிவும் மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

மாற்றுக் கட்சியினருக்கு பதவி கொடுத்து அந்த கட்சிக்கு இருப்பதால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் நீண்ட காலமாக திமுகவில் இருப்பவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

Previous articleவெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next articleஉண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! நாராயணன் திருப்பதி அதிரடி!