“உன்னை கொன்றுவிடுவேன் ” ஆபாச வார்த்தைகளால் சிவி சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்!! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!
அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து வருகிறது.திமுக விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதனை திசைதிருப்பவே இவ்வாறு அதிமுக அமைச்சர்கள் மீது சோதனை செய்வதாக கூறுகின்றனர்.இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தான் சக்திவேல். சிவி சண்முகம் மு க ஸ்டாலினை பற்றி கருத்து தெரிவித்ததற்கு இவர் எதிர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சி.வி சண்முகத்துக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். மேலும் சிவி சண்முகத்தை ஆபாசமாக திட்டியும் உள்ளார்.இது குறித்த வீடியோவானது வெளியாகி உள்ளது. இவ்வாறு திமுக பிரமுகர் கொலை மிரட்டல் கொடுத்து ஆபாசமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவி சண்முகத்தின் வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.