சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

0
238

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது.

மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் மட்டுமே இத்தகைய சாதனைகளை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பே 40 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. திரைப்படத்தை தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல விலைக்கு வியாபாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துகு யு சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இதனால் இந்த படத்தை குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கலாம். மேலும் படம் 2 மணிநேரம் 23 நிமிடம் ஓடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleஎன்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here