Breaking:! 100 மற்றும் 750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறுபவர்களுக்கு எச்சரிக்கை:! இனி இது கட்டாயம்!!
இலவசம் மின் நுகர்வோர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.
ஆதார் சட்டம் 2016 பிரிவு 7 -ன் கீழ் இலவசமாக மின்சாரம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர்,விவசாயிகள்,750 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறும் விசைத்தறி நுகர்வோர்,200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர் என இலவச மின்சாரத்தை பெறும் அனைத்து நுகர்வோர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ஒரே வளாகத்தில் ஒன்றிருக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்து மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவே,மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.