தமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்!
இம்மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகைகளாக உள்ளது.அந்த வகையில் இந்த மாதம் இறுதியில் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி ஜவுளி வியாபாரம் மற்றும் ஆபரணம் ,பட்டாசு என அனைத்து வியாபாரமும் கலைகட்டியுள்ளது.மேலும் தீபவாளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் ஆங்கங்கே திறக்கப்பட்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக பண்டிகைகள் கொண்டாடப்படாமல் இருந்தது.தற்போது தான் கொரோன பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
அதனால் ஆடை ,ஆபரணம் எடுக்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் தீயணைப்பு துறையினர் சில கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அமல் படுத்தியுள்ளனர்.இந்த ஆண்டு பட்டாசு கடைகள் வைப்பதற்கு தீயணைப்பு துறையினருக்கு 7,021விண்ணப்பங்கள் வந்துள்ளது.அந்த விண்ணப்பத்தில் 5,110பட்டாசு கடைகள் மட்டுமே வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதியில்லாத 538 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.1,373விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளைவிட நடப்பாண்டில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளன அதில் 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதால் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.